புஷ்பா 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் அடுத்ததாக தமிழ் இயக்குநர் அட்லீயுடன் இணையவுள்ளார். ஷாருக்கானின் ஜவான் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அட்லீ, இப்போது அல்லு அர்ஜுனை ஹீரோவாக கொண்டு படம் இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும், ம்ருணால் தாகூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா, பாக்யஸ்ரீ ப்ரோஸ் உள்ளிட்ட பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்தப் படத்தின் கதை, இந்திய சினிமாவில் இதுவரை உருவாக்கப்படாத வகையில் இருக்கும் என்றும், அதற்காக ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேமியோ தோற்றத்தில் நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பிடத்தக்கது என்னவெனில், அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.