நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கியுள்ள வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46வது படத்தின் படப்பிடிப்பிலும் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்து வருகிறார். மேலும், ராதிகா சரத்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நட்சத்திரங்களுடன் நடிகை பவானி ஸ்ரீயும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சூரியுடன் நடித்த ‘விடுதலை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.