Friday, October 4, 2024

வேட்டையன் படத்தோடு ரிலீஸ் ஆகிறதா விடாமுயற்சி படத்தின் டீஸர்? லைக்கா போட்ட கணக்கு கரெக்ட்டா இருக்குமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் நடித்துள்ள “வேட்டையன்” திரைப்படம் வரவிருக்கும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்போது இப்படத்தின் விளம்பரப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதால், இன்னும் சில நாட்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என கூறப்படுகிறது.

இதே நேரத்தில், “வேட்டையன்” படத்தின் இடைவேளையின் போது அஜித் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட இருக்கிறது என கூறப்படுகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளதாக அறியப்படுகிறது.

அஜித் நடித்துள்ள “விடாமுயற்சி” படத்தையும் “வேட்டையன்” படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இந்நிலையில், “விடாமுயற்சி” படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல், டீசர் அல்லது பாடல்கள் குறித்த எந்தவொரு புதிய தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் மட்டும் வெளியிடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News