லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், முதல் நான்கு நாட்களில் 404 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், “கூலி படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக ரசித்து வருகிறார்கள். அவர்களது பேச்சைக் கேட்டு மற்ற ரசிகர்களும் தியேட்டருக்கு வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் மட்டுமின்றி, விடுமுறை முடிந்த பிறகும் 80 சதவீதம் அளவில் ரசிகர்கள் தியேட்டர்களில் இருக்கிறார்கள்.
அதனால் படத்துக்கான நெகட்டிவ் விமர்சனங்கள் வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. விமர்சகர்கள் குறை சொல்லினும், ரசிகர்கள் எந்த குறையும் சொல்லவில்லை. ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லையென்றால் திங்கட்கிழமை கூட்டம் குறைந்திருக்கும். ஆனால் அந்த நாளும் கூட்டம் தொடர்ந்தது. அதனால் விமர்சனங்களை தாண்டி கூலி படம் வெற்றிகரமாக வசூலித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.