இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் தெலுங்கு திரைப்படம் காட்டி. இந்த படத்தை பான் இந்தியா அளவில் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த படத்தின் மூலம் விக்ரம் பிரபு நேரடியாக ஒரு தெலுங்கு படத்தில் முதல்முறையாக நடிக்கிறார். மேலும், இயக்குநர் கிரிஷ் மற்றும் அனுஷ்கா கூட்டணி, வேதம் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறது.
காட்டி திரைப்படம் தொடர்பான முக்கிய அப்டேட்டுகள் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டன. ஆனால் அதன் பிறகு எந்த புதிய தகவல்களும் வெளியாகவில்லை. படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்குமேல் நேரமில்லை என்பதையும் கருத்தில் கொள்ளும் போது, புதிய அப்டேட்டுகள் இல்லாமல் இருப்பது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், படம் தள்ளிப் போய்விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.