Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

தனுஷ் – வெங்கி அட்லூரி கூட்டணி மீண்டும் இணைவது உறுதியா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் வருகிற ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்குப் பிறகு, தனுஷ் நடித்துள்ள இட்லி கடை, தேரே இஸ்க் மெயின் ஆகிய படங்களும் ரிலீஸூக்கு தயாராக உள்ளன. மேலும், விக்னேஷ் ராஜா, மாரி செல்வராஜ், வெற்றிமாறன், தமிழரசன் பச்சமுத்து, ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட இயக்குநர்களின் படங்கள் தனுஷின் கைவசம் உள்ளன.

மேலும், வாத்தி படத்திற்குப் பிறகு, மீண்டும் இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. தற்போது வெங்கி அட்லூரி சூர்யாவின் 46வது படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை முடித்தவுடன், தனுஷை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதன் மூலம், வாத்தி படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தப் படத்திற்கு ஹானஸ்ட் ராஜ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News