சில மாதங்களுக்கு முன்பு அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடித்த வெளியான திரைப்படம் ‘டிராகன்’.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாக உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்தது. தெலுங்கு மொழியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, பல தயாரிப்பு நிறுவனங்கள் ‘டிராகன்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, ஏ.ஜி.எஸ் நிறுவனம் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘டிராகன்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.