தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், சமீபத்தில் ஆந்திரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் அவர் நடித்த ஹரிஹர வீர மல்லு மற்றும் ஓ.ஜி ஆகிய படங்கள் வெளியானது.

இதில் ஓ.ஜி படம் பெரிய வரவேற்பையும் வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் உஸ்தாத் பகத்சிங் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கன்னட சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தப் படத்தை இயக்குவதற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.