தமிழில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னர் ‘லவ் டுடே’ படத்தை இயக்கியும் அதில் நடித்தும் வெற்றி பெற்றார். அந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் வெளிவந்த ‘டிராகன்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

தற்போது, அவர் கீர்த்தீஸ்வரன் இயக்கிய ‘டியூட்’ படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகின்றன.
‘டியூட்’ படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டியில் பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே 2’ பற்றிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதில், லவ் டுடே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான யோசனையும் எனக்குள் உள்ளது. ஆனால் இப்போதைக்கு அதை தொடங்கப்போவதில்லை. வேறு கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். அவை முடிந்தபின் தான் ‘லவ் டுடே 2’ படத்தை ஆரம்பிப்பேன் என்றார்.