தனுஷ் தற்போது தமிழில் ‘இட்லி கடை’, ஹிந்தியில் ‘தேரே இஸ்க் மெயின்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த இரு படங்களுக்குப் பிறகு, ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள ஒரு புதிய படம் உருவாக உள்ளது. இந்தப் படத்திற்கு ‘அறுவடை’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், படப்பிடிப்பு பணிகள் ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்க உள்ளார்.
இவருடன் மலையாளத் திரையுலகில் முக்கிய நடிகர்களாகிய ஜெயராம் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.