2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, மற்ற நடிகர்கள் போட்டியிடாமல் தங்கள் படங்களை தள்ளி வைப்பது வழக்கம்.

ஆனால், 2026 பொங்கலுக்கு சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிக்க, சுதா கோங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படமும் வெளியாகவுள்ளதாக தெரிகிறது. ‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீட்டு அறிவிப்பு நேற்று வெளியான உடனே, ‘பராசக்தி’ படத்தின் தயாரிப்பாளர் “இந்த பொங்கல்” என குறிப்பிட்டு ‘பட்டாசு, நெருப்பு’ எமோஜிகளை பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் ‘பராசக்தி’ படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளாரா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இந்த இரு படங்களின் வெளியீடு பின்னணியில் அரசியல் காரணங்களும் இருக்கலாம் என பேசப்படுகிறது.