பிரபல தெலுங்கு இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ‘கபாலி’ படத்தில் நடித்த ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சமீபத்தில், இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று ராதிகா ஆப்தே உறுதியாக தெரிவித்தார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் கதாநாயகியாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துவரும் நிலையில், தற்போது நடிகை நிவேதா தாமஸ் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நிவேதா தாமஸ், திரையுலகில் முக்கிய கதாநாயகியாக சில படங்களில் நடித்திருந்தாலும், ‘பாபநாசம்’, ‘தர்பார்’ போன்ற படங்களில் ஹீரோக்களின் மகளாகவும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.