Tuesday, October 29, 2024

மும்பைக்கு ஷிப்ட் ஆனது ஏன் ? மனம் திறந்த‌ நடிகர் சூர்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா நடித்துள்ள “கங்குவா” திரைப்படம் வரும் மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதிக்கு சில நாட்களே உள்ள நிலையில், படக்குழு தொடர்ந்து ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நடிகர் சூர்யாவும் பல பேட்டிகளில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கங்குவா படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

அதன் அடிப்படையில், தற்போது தான் மும்பையில் செட்டில் ஆனது பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்துள்ளார். மும்பையில் செட்டிலாக காரணம் ஜோதிகா மற்றும் அவருடைய குழந்தைகளே என்று கூறியுள்ளார்.ஜோதிகா 12 வயதுவரை மும்மபயில் வளர்ந்தவர் பின்னர் அவர் சென்னை வந்து பல வருடங்களானது.அவரின் விருப்பம் மீண்டும் மும்பையில் வாழவேண்டும் என்பதாக இருந்தது. அவரின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து மும்பைக்கு ஷிப்ட் ஆனதாக கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் செட்டில் ஆனதாக பல மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

மேலும், பாலிவுட் படங்களில் சூர்யாவும் ஜோதிகாவும் அதிக அக்கறை செலுத்துவதாகவும், அதுவே அவர்களது மும்பை செட்டில் ஆக காரணம் என்றும் கூறப்பட்டது. மும்பையில் இருந்தபடியே சூர்யா சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புகளில் அவ்வப்போது கலந்து கொண்டார். இந்நிலையில், மும்பையில் செட்டில் ஆக காரணம் என்ன என்பதை சூர்யா தனது பேட்டியில் தெளிவாக விளக்கியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News