Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஏன் என்னை குற்றவாளி போல பார்க்கிறீர்கள்? நாக சைதன்யா OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர், நடிகை சமந்தாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

எனினும், பல தவிர்க்க முடியாத காரணங்களால், 2021 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்தார்.அண்மையில், நடிகை சமந்தாவை விவாகரத்து செய்ததற்கான காரணங்களை குறித்து நாக சைதன்யா மனம் திறந்து பேசியுள்ளார்.பேட்டியில் அவர் கூறியதாவது, நானும் சமந்தாவும் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். நாங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவே விவாகரத்து முடிவை எடுத்தோம்.

இதை விட இன்னும் என்ன விளக்கம் தேவை?திருமண வாழ்க்கையை முடித்து விட்டு, இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், ஏன் என்னை குற்றவாளி போல பார்க்கிறீர்கள்? நான் ‘உடைந்த குடும்பத்தில்’ வளர்ந்தவன், அதனால் அந்த அனுபவம் என்ன என்பதைக் குறித்து நன்றாக அறிவேன்.ஒரு உறவை முறித்துக்கொள்ளுவதற்கு முன், நான் ஆயிரம் முறை யோசிப்பேன். ஏனென்றால், அதன் பின்விளைவுகளை நன்றாக அறிந்துள்ளேன். எங்கள் விவாகரத்து பரஸ்பர ஒப்புதலுடன் செய்யப்பட்ட ஒன்று.இவ்வாறு, தனது மனம் திறந்து கருத்துக்களை நாக சைதன்யா பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News