நடிகர் ஆர்.ஜே. பாலாஜி இயக்குநராக மாறி, நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன்பு இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அப்போது பேசப்பட்டு வந்தது. ஆனால், ஆர்.ஜே. பாலாஜி தரப்பிலிருந்து அதுகுறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், படம் ஆர்.ஜே. பாலாஜி கைநழுவி போனது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து பலவிதமான யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி இதுகுறித்து ஒரு பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.
“‘மூக்குத்தி அம்மன்’ வெளியான பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் யோசித்து வந்தனர். ஆனால், எனக்கு இரண்டாம் பாகம் குறித்து ஐடியா இல்லை என்னிடம் இருந்த கதை இரண்டாம் பாகதோடு பொருந்தவில்லை.எனது எண்ணங்கள் அனைத்தும் மற்ற கதைகள் மற்றும் புதிய படங்களில் மட்டுமே இருந்தன. இப்போது என்னை திரைத்துறையில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்குகிறார் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நான் கால் செய்து பாராட்டினேன் என தெரிவித்தார் ஆர்.ஜே. பாலாஜி.