Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

‘வானம்’ படத்தில் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தீர்கள்? அனுஷ்கா ஷெட்டி சொன்ன நச் பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமான நடிகையாவார் அனுஷ்கா. அழகுடன் திறமையும் கொண்டிருந்த அனுஷ்கா, கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக பணியாற்றி வந்தார். ஆனால் ஒருசமயம் திடீரென அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் குறைந்தன. தற்போது மீண்டும் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார். தற்போது காட்டி என்ற படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா ஷெட்டி ‌. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அவரது திரையுலக அனுபவங்களைப் பற்றி பேசிய அனுஷ்கா, “தைரியம் என்பது நாம் எடுக்கும் சோதனை முயற்சிகளில் தான் கிடைக்கும். என் வாழ்க்கையில் நல்வாய்ப்பாக பல சவாலான கதைகளில் நடித்தேன். ‘அருந்ததி’ படத்துக்குப் பிறகு, ‘வானம்’ படத்தில் விலைமாதுவாக நடிக்க நான் துணிந்தேன். அதற்கு சிலர் ஏன் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறீர்கள் எனக் கேட்டனர். ஆனால் எனக்கு அந்தக் கதையுடன் தனிப்பட்ட பற்றுறவு இருந்தது.

எனது மனதிற்கு ஒன்றை செய்வது உண்மையிலேயே இன்பமாக இருந்தால், அதில் லாபமோ நஷ்டமோ என்று கவலைப்படமாட்டேன். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடிப்பது ஒரு சவாலாக இருந்தாலும், அந்தக் கதையும் எனக்கு பிடித்திருந்தது. எனவே நான் அதைச் செய்தேன். நமக்குப் பிடித்த கதைகளில் நடிக்காதால், திரைத்துறையில் இருப்பதற்கு அர்த்தமே இல்லை,” என்று கூறினார். மேலும் அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

Read more

Local News