நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, தார்மீகப் பொறுப்பு ஏற்று தலைவர் மோகன்லால் தனது பதவியிலிருந்து விலகினார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று, சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வானார். மோகன்லால் ராஜினாமா செய்தது அவர்மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதால்தான் என்று பலர் கூறியிருந்தனர்.

ஆனால் இதுகுறித்து மோகன்லால், “என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. நான் விமர்சனங்களை சந்தித்தேன். திடீரென பலருக்கு எதிரியாக மாறியதும் உண்மை. ஆனால் விமர்சனங்களுக்காகவே நான் ராஜினாமா செய்யவில்லை. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டதாக நினைத்ததால் தான் ராஜினாமா செய்தேன்.
இதை நான் தோல்வியாக பார்க்கவில்லை. ஒரு காலக்கட்டம் முடிந்தால் தலைமை மாறுவது இயல்பான நடைமுறை. புதிய பெண் தலைவர் வந்திருப்பது சங்கத்திற்குள் நல்ல மாற்றங்களை உருவாக்கும். மேலும், சங்கத்துடன் முரண்பட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் சேர்வது குறித்து அவர்கள் தாமே முடிவு செய்ய வேண்டும்” என கூறினார்.