தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 26வது திரைப்படமான ‘எஸ்கே 26’ (SK26)-ஐ யார் இயக்கப்போகிறார்கள் என்பது குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
அந்த எதிர்பார்ப்புக்கு பதிலளிக்கும் வகையில், 2022-ம் ஆண்டு வெளியான ‘டான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி, ‘எஸ்கே 26’ திரைப்படத்தை இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பிறகு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் இன்னொரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.