நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கிய ‘தக் லைப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, மற்ற பிற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது.

இதன் பிறகு புகழ்பெற்ற ஸ்டன்ட் இயக்குனர்களான அன்பறிவு இயக்குநர்களின் இயக்கத்தில், கமல்ஹாசன் தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில மாதங்களாக இப்படத்திற்கு தேவையான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், இந்தப் படத்திற்கான இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் அல்லது அனிரூத் இருவரில் படக்குழு ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டு வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.