Tuesday, December 17, 2024

96 திரைப்படம் இயக்கும் போதே என்னிடம் வையலண்டான ஒரு ஆக்ஷன் கதை இருந்தது… இயக்குனர் பிரேம் குமார் பகிர்ந்த சுவாரஸ்யம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கிய ’96’ திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டது. இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இப்படம் தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.இதை தொடர்ந்து, 6 வருடங்கள் கழித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் பிரேம் குமார் இயக்கத்தில் ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளியானது. இதில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

பிரேம் குமார் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே காதல் மற்றும் மனித அன்பை மையமாகக் கொண்டவை. இதன் மூலம் அவர் மிகவும் மென்மையான, அன்பான இயக்குனர் என்ற பிம்பம் மக்களிடம் உருவாகியுள்ளது. ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பிரேம் குமார், இந்த பிம்பத்தை உடைக்கும் விதமாக பதிலளித்துள்ளார்.

அந்த நேர்காணலில் இயக்குனர் ஞானவேல் நீங்கள் ஒரு ஆக்ஷன் திரைப்படம் எடுப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரேம் குமார் அளித்த பதில் “96 திரைப்படம் இயக்கும் போதே என்னிடம் ரத்தம் சொட்டும் ஒரு ஆக்ஷன் கதைக்கான திரைக்கதை இருந்தது. அந்த கதையை விஜய் சேதுபதியிடம் நான் சொன்னேன். அதை கேட்டபிறகு 3 நாள் அவர் என்னிடம் பேசவே இல்லை. ஏனெனில் அந்தக் கதையில் மிகவும் வன்முறை இருந்தது. ஆனால் அந்த வன்முறைக்கு சிறந்த காரணமும் இருக்கிறது. கண்டிப்பாக நான் அந்தக் கதையை படமாக எடுப்பேன். நான் இயக்கிய இரண்டு திரைப்படங்களை பார்த்து நான் மென்மையானவன் என பேசுகிறார்கள். ஆனால் நான் சிறுவயதில் மிகவும் வையலண்ட் இருந்தேன்” என்று கூறினார். இவரது இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி, அவரைப் பற்றிய புதிய பார்வையை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News