பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ”கே.ஜி.எப்” பட வாய்ப்பு முதலில் ஒரு பிரபல நட்சத்திரத்திற்கு கிடைத்துள்ளது. அனால், அவர் சில காரணங்களால் என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார். இந்த விஷயத்தை கே.ஜி.எப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் சாலுவே கவுடா பகிர்ந்துள்ளார்.

அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், சில ஆண்டுகளுக்கு முன்பு கே.ஜி.எப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பெரிய நட்சத்திரத்தை அணுகினோம். ஆனால் அப்போது கன்னட படங்களுக்கான சந்தை மிகவும் மோசமாக இருக்கிறது என கூறி அதில் நடிக்க அவர் மறுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
கேஜிஎப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு ஹோம்பலே பிலிம்ஸ், நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அடுத்ததாக, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், பிரபாஸ் நடிக்கவுள்ள மூன்று புதிய படங்களுக்கு ஒப்பந்தமும் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.