ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘தணல்’ படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. சென்னையில் பல வங்கிகளை ஒரே நேரத்தில் கொள்ளையடிக்க வில்லன் குழு திட்டமிடுகிறது. அந்த சதியை, அன்றுதான் போலீஸ் கான்ஸ்டபிளாக சேர்ந்த அதர்வா எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. ‘அஅஅ’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனின் மகன் ஜான் பீட்டர் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சேந்தன் அமுதனாக நடித்த அஸ்வின் ககுமனு, இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். லாவண்யா திரிபாதி கதாநாயகியாக உள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில், குறிப்பாக குடிசைப்பகுதி பின்னணியில் நகர்கின்றன.
சமீபத்தில் இந்தப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அதர்வா, “ஒரு வித்தியாசமான கதையை எடுத்துள்ளோம். நான் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடித்தாலும், இது மாறுபட்ட கதாபாத்திரம். இத்தகைய படங்களுக்கு ஹீரோயின் தேவையா என்று கேள்விகள் எழுகிறது. ஹாலிவுட் படங்களில் பல்வேறு புதிய வகை ஜானர்கள் உருவாகின்றன. ஓடிடி தளங்களில் வித்தியாசமான கதைகள் வருகின்றன. சில படங்களில் நாயகி இருப்பதே இல்லை, ஆனால் நாம் அவற்றை ரசித்து பார்க்கிறோம். ஆனால் நம் நாட்டில் காமெடி, ரொமான்ஸ், இசை போன்றவை அவசியமாக இருக்கிறது. ஒரு படத்தின் வெற்றிக்காகவும், பிஸினஸுக்காகவும் பல அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளது” என்றார். மேலும், “நான் திருமணம் செய்யப் போகிறேன். எனது தம்பி அதர்வாவும் பேச்சுலராக இருக்கிறார், அவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று விஷால் சொன்னதாகக் கேள்விப்பட்டேன்” என்று நிருபர்கள் கேட்டபோது, “விஷாலின் திருமணம் நடந்தவுடன் என் திருமணமும் நடக்கும்” என பதிலளித்துள்ளார்.