நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் ஏ.ஐ. (Artificial Intelligence) தொழில்நுட்பம் குறித்த படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கல்வியில் முழுமையாக ஈடுபட்டிருந்த அவர், இன்று சென்னை திரும்பினார்.சென்னை விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள், எதிர்பார்க்கப்பட்ட பல கேள்விகளை எழுப்பினர். அந்த நேரத்தில், அவர் தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என உறுதியாக தெரிவித்தார்.
மேலும், விக்ரம் 2 படத்தினை பற்றிய கேள்விக்கு, “இப்போதைக்கு வேறு ஒரு புதிய திரைக்கதையை எழுதிக்கொண்டு இருக்கிறேன்” என்று தெரிவித்தார். இதனால், விக்ரம் 2 குறித்து எந்தவொரு தெளிவும் அளிக்காமல், புதிய திட்டம் ஒன்றில் ஈடுபட்டு இருப்பது உறுதியாகியது.
அத்துடன், அரசியல் தொடர்பாக, பெரியார் குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, “உங்களுக்காக நின்னு பேசினேன்” என்று மட்டும் கூறிவிட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.தற்போது, கமல்ஹாசன் நடித்து வரும் முக்கியமான திரைப்படங்கள் தக் லைஃப், இந்தியன் 3, மற்றும் கல்கி 2 என்பவை என குறிப்பிடப்படுகிறது.