Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற வெற்றிப் படங்களை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் ஏ.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் சார்பில் யுவராஜ் மற்றும் மகேஷ்ராஜ் பசலியான் ஆகியோர் தயாரித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மகேஷ் பசலியான் புதிய ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக, ‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குனரான அபிஷன் ஜீவிந்த் நடிக்கிறார். கதாநாயகியாக பிரபலமான மலையாள நடிகையான அனஸ்வர ராஜன் நடிக்க உள்ளார். மேலும், டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றிய மதன், இப்போதும் இந்த புதிய படத்தை இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் பூஜை வருகிற 3ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. ரூ.8 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை புரிந்தது. இதன் காரணமாக திரையுலகத்தின் கவனம் முழுவதும் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் மீது திரும்பியது. சமீபமாக அவர் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News