இட்லி கடை படத்தின் வேலைகளை முடித்ததிற்குப் பிறகு, நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தி மொழியில் உருவாகும் ‘தேரே இஸ்க் மெயின்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு ‘அறுவடை’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கு தேவையான செட் அமைக்கும் பணிகள் தாமதமாகி இருப்பதால், படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் துவங்க முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்திற்காக 15 ஏக்கர் பரப்பளவில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து மூன்று மாதங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.