அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதை, சமீபத்தில் ஆதிக் உறுதி செய்தார். இந்தப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

சில மாதங்களாக இந்தப்படத்தின் தயாரிப்பில் குழப்பங்கள் உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால் இறுதியாக, இந்தப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது. இம்மாத இறுதியில் அஜித் சென்னை திரும்பவிருக்கிறார். அடுத்த மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தப்படத்தில் நடிக்க மோகன்லால், ஸ்ரீலீலா ஆகியோரிடம் கால்ஷீட் தேதிகள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.