தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், அடுத்து கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது அவரது 31வது திரைப்படமாக உருவாகிறது.
தற்காலிகமாக ‘என்டிஆர் – நீல்’ என அழைக்கப்படும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.