ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அஜித்குமாரின் AK64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். மீண்டும் அஜித் – ஆதிக் வெற்றி கூட்டணி இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அஜித் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அஜித்தின் 64வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், AK64 முன்தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன. லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும். அஜித் சார் சினிமாவை எந்த அளவு நேசிக்கிறாரோ, அதே அளவு ரேஸிங்கையும் விரும்புகிறார். இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

