சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்து “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து சசிகுமார் “பிரீடம்” எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கதையின் மையத்தில், தவறே செய்யாமல் இலங்கையைச் சேர்ந்த அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிய இருவர், அங்கிருந்து தப்பித்து செல்லும் போராட்டத்தைச் சுற்றியே கதை அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த திரைப்படம் கடந்த ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகவில்லை. இந்நிலையில் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.