Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இந்தியன் 3 எப்போது வெளியாகும்? ஷங்கர் சொன்ன அப்டேட் #Indian3

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் திரைக்கு வந்தது.

கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில், ‘இந்தியன் 3’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்திய ஒரு பேட்டியில் இயக்குனர் ஷங்கர், “இந்தியன் 3 படத்தின் பல விஎப்எக்ஸ் பணிகள் மற்றும் சில காட்சிகள் இன்னும் மீதமுள்ளது. இதற்குச் 6 மாதங்கள் தேவைப்படுகின்றன” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ‘இந்தியன் 3’ இந்த ஆண்டின் முதல் பாதியில் திரைக்கு வர வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிறது.

- Advertisement -

Read more

Local News