விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்தாண்டு நடந்த 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அடுத்து ஒன்பதாவது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கப் போகிறார். அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ள பிக்பாஸ் 9 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்க உள்ளது. அதோடு தற்போது இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பினை விஜய் டிவி வெளியிடவில்லை என்றால் கூட சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. போட்டியாளர்களாக காமெடி நடிகர் பால சரவணன், நடிகை அம்ருதா, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன், விஜே பார்வதி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
