தளபதி விஜய் நடிப்பில் ‘கோட்’ படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இதேசமயம், அவர் 2017-ல் இயக்கிய ‘பார்ட்டி’ திரைப்படம் 2018-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் தற்போது வரை ரிலீஸ் ஆகவில்லை.

இப்படத்தில் ஜெய், சிவா, ஜெயராம், ஷாம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்த இந்தப் படம் சுமார் ஏழு ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது 2026 பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் இந்த ‘பார்ட்டி’ படமும் வெற்றி பெறும் என படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.

