சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷின் 51வது படமாக ‘குபேரா’ உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி தனுஷ் இயக்கி நடித்துள்ள நீக் திரைப்படம் மற்றும் தற்போது இயக்கிய நடித்துவரும் இட்லி கடை திரைப்படம் மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது இந்த குபேரா படத்தினை முதலில் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால், இன்னும் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பை முடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து 2025ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி திரைக்கு கொண்டு வர தற்போது திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.