இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அவரது 23வது திரைப்படம் ‘மதராஸி’. இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். மேலும் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு, படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாத இறுதியில் லண்டன் நகரத்தில் பிரமாண்டமாக நடத்தும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்திலிருந்து முதல் பாடல் அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.