இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்த ‘புஷ்பா’ (2021) மற்றும் ‘புஷ்பா 2’ (2024) ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, ‘புஷ்பா 2’ உலகளவில் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, வசூல் சாதனை படைத்தது.

இந்த சூப்பர்ஹிட் தொடரின் மூன்றாம் பாகம் குறித்து, படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர், ‘புஷ்பா 3’ திரைப்படம் 2028ஆம் ஆண்டு வெளியாகும் என்று உறுதியாக தெரிவித்தார்.
முதலாவது பாகத்திற்கும், இரண்டாவது பாகத்திற்கும் மூன்று ஆண்டுகள் இடைவெளி இருந்தது. அதேபோல், மூன்றாம் பாகமும் தாமதமாகும் என கூறப்படுகிறது. காரணம், அல்லு அர்ஜுன் இரண்டு புதிய படங்களில் நடிக்க இருக்கிறார். அவற்றில் ஒன்று, அட்லி இயக்கும் படம், மற்றொன்று, த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் படம் ஆகும். இந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்த பிறகே, ‘புஷ்பா 3’ படப்பிடிப்பில் இணையவுள்ளார் அல்லு அர்ஜுன்.