Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இயக்குனர் பாலாவின் வணங்கான் ரிலீஸ் எப்போது? கசிந்த புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அவருடன் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிரடியான சண்டைக் காட்சிகள் மற்றும் திரைக்கதை மீதான எதிர்பார்ப்புகள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளன.

தொடக்கத்தில் இப்படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் வெளியேறியதை தொடர்ந்து, அருண் விஜய் இந்த படத்தில் இணைந்தார். 2024 ஜூலை மாதத்தில் வெளியீடு திட்டமிடப்பட்டிருந்த படம், அப்போதைய காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.தற்போது, படக்குழு ‘வணங்கான்’ திரைப்படத்தை 2025 பொங்கல் திருநாளுக்கு திரையரங்குகளில் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படமும் 2025 ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News