விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அதையடுத்து 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அந்த சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக விஜய் டிவி வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
