Touring Talkies
100% Cinema

Saturday, August 16, 2025

Touring Talkies

அனிருத்-க்கு எப்போது திருமணம்? அவரது தந்தை கலகலப்பாக சொன்ன விஷயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ் நடித்த ‛3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற ‛ஒய் திஸ் கொலவெரி’ பாடல் உலகளவில் பெரும் வெற்றி பெற்றதால், தனது முதல் திரைப்படத்திலேயே பிரபலமாகி விட்டார். பின்னர் தமிழில் முன்னணி இடத்தை பிடித்த அவர், சமீபகாலங்களில் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் இசையமைத்து, இந்திய அளவில் பிரபலமானவர் ஆனார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‛கூலி’ திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். அந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்காக அனிருத்தின் தந்தையும் நடிகருமான ரவி ராகவேந்திரா வந்திருந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், அனிருத் எப்போது திருமணம் செய்கிறார்? எனக் கேட்டனர்.

அதற்கு அவர், ‛எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் உங்களையே கேட்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அவர் திருமணத்துக்கு என்னையும் அழைக்க மறக்க வேண்டாம்’ என்று நகைச்சுவையாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

- Advertisement -

Read more

Local News