இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமார் நடிப்பில் “குட் பேட் அக்லி” எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், பிற பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் முன்னதாக, கடந்த பல வாரங்களாக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. டீஸர் பாடல்கள் என அனைத்தும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இதனிடையே, “குட் பேட் அக்லி” படத்தின் டிரைலர், ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.