வீர தீர சூரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சீயான் விக்ரம், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் எஸ்.ஜே.சூர்யா இதை பார்க்கும் போது ஹாலிவுட் நடிகர்களான ராபர்ட் டி நிரோ, அல்பசினோ போன்ற நடிகர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. அவரிடமிருந்து நான் சில விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார். அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.இவ்வாறு விக்ரம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார்.
