தெலுங்கு சினிமாவில் பிரபலமான இளம் நட்சத்திரங்களில் ஒருவரான விஷ்வக் சென், தற்போது “லைலா” படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக அகன்ஷா ஷர்மா நடித்துள்ளார்.


இப்படத்தில் விஷ்வக் சென், ஆண் மற்றும் பெண் என இரு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ராம் நாராயண் இயக்கத்தில், ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரில் சாஹு கரபதி தயாரித்துள்ளார்.

படம் வெளியானதை ஒட்டி, விஷ்வக் சென் கூறியதாவது,”நான் இதுவரை ஒரு படத்திலும் பெண் வேடத்தில் நடித்ததில்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பும் ஆர்வத்தில் இருந்தேன். அப்போது ‘லைலா’ என்னிடம் வந்தது. அதனால்தான் இப்படத்தில் நடிக்க முடிவு செய்தேன். என்றுள்ளார்.