சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். . இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உப்பேந்திரா, சவுபின் சாகிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பாலிவுட் நடிகர் அமீர் கான் இப்படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ரஜினி சாரிடம் நான் கூலி பட கதையை சொல்லும் போதே நான் கமல் சார் ரசிகன் என சொல்லிவிட்டேன். ரஜினி சார் அந்த சமயத்தில் எதுவும் சொல்லவில்லை ஆனால் கூலி டப்பிங் முடித்த பிறகு என் உதவி இயக்குனர்களிடம், லோகேஷ் கமல் ரசிகன் என்று சொல்லி தான் கதையை ஆரம்பித்தார் என சொன்னார்… பிறகு என்னை பார்த்து உன்னை கூலி ஆடியோ LAUNCH-ல் பார்த்துக்கொள்கிறேன் என நகைச்சுவையாக சொல்லிவிட்டு சென்றார் என கூறியுள்ளார்.