Wednesday, October 16, 2024

‘ஆலன்’ எப்படிப்பட்ட படம்? நடிகர் வெற்றி டாக்! #AALAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ போன்ற படங்களில் நடித்த நடிகர் வெற்றி, சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய புதிய படம் ‘ஆலன்’ குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். இது ஒரு காதல் திரைப்படம் என்று அவர் கூறியுள்ளார். நம்முடைய ‘ஆட்டோகிராப்’ மற்றும் ‘பிரேமம்’ போன்ற படங்களின் வரிசையில் ஒரு பயோகிராஃபியாக இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையைப் பற்றியது, அவருடைய 15 வயது முதல் 40 வயது வரையிலான கதையாம்.

வெற்றியின் ‘பம்பர்’ படத்தின் படப்பிடிப்பின் போது, ‘ஆலன்’ கதையை அவரிடம் இயக்குனர் முன்மொழிந்துள்ளார். இயக்குனர் முதலில் கதையைச் சொல்லாமல், திரைக்கதை புத்தகத்தை வழங்கியிருக்கிறார். வெற்றி அதை படித்தபோது, அது ஒரு நாவலைப் போல உணர்த்தியதாக தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு பல பகுதிகளில் படப்பிடிப்பு தேவைப்பட்டதுடன், காதல் படங்களுக்கு மிகவும் முக்கியமான இசை சிறப்பாக அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை இயக்குனர், தயாரிப்பாளராகவும் இருந்து, எந்த சமரசமும் இல்லாமல் படத்தை உருவாக்கியுள்ளார்.

காசி, ரிஷிகேஷ், கொடைக்கானல், பாண்டிச்சேரி, ராமேஸ்வரம், ஜெர்மனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜெர்மனியில் ஒரு தமிழ் பேராசிரியராக ஜெர்மன் நடிகை நடித்துள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் பேசப்படாத ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையைப் படம் பேசுகிறது. க்ரைம் திரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்த வெற்றிக்கு இந்த படம் முழுமையாக உணர்ச்சி நிறைந்த கதையாக இருக்கும், மேலும் மக்களுக்கு இது பிடிக்கும் என்று அவர் நம்புகிறார்.

- Advertisement -

Read more

Local News