இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் இசைஞானி இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். கடந்த ஆண்டு, இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு, இப்படம் கைவிடப்பட்டதாக சில தகவல்கள் வெளிவந்தன. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
தற்போது, கன்னெக்ட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.