நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த குஷி திரைப்படத்திற்கு பிறகு வெப்சீரிஸ்களில் தொடர்ந்து நடித்து வந்தார் சமந்தா. மேலும், தானே தயாரித்திருந்த ‘சுபம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் (கெஸ்ட் ரோல்) நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, முன்பு அவரை வைத்து ‛ஓ பேபி’ படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி தற்போது இயக்கும் ‛மா இண்டி பங்காரம்’ என்ற புதிய படத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் சமந்தா.
1980களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகிறது. இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதை பணிகள் இப்போது நடைப்பெற்று வருகின்றன. இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தையும், ‘சுபம்’ திரைப்படத்திற்கு அடுத்ததாக, தனது சொந்த நிறுவனம் டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் சமந்தாவே தயாரிக்கவுள்ளார்.