ஹிந்தியில் சல்மான் கான் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அவருக்கு கம்பேக் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் முருகதாஸ், தான் இயக்கிய சிக்கந்தர் பட தோல்விக்கு என்ன காரணம் என கூறியுள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்திய ஒரு பேட்டியில், சிக்கந்தர் படத்தின் கதையில் அவ்வபோது ஸ்பாட்லேயே பல மாற்றங்கள் செய்யப்பட்டன. சல்மான்கான் சாருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் இரவு தான் படப்பிடிப்பே நடக்கும் அவர் வர சில சமயம் தாமதமும் ஆகும். லைவ் லொகேஷன்களில் ஷூட் செய்ய முடியாததால் அவரது காட்சிகளை கிரீன் ஸ்கிரீன் மற்றும் சிஜியை வைத்தே எடுக்க வேண்டியதாக இருந்தது. இவையெல்லாம் தான் அந்த படத்தின் வரவேற்பைப் பெறாததற்கு காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.