நடிகர் தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ என்ற திரைப்படத்தை இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார். இந்தப் படத்தை ‘டான் பிக்சர்ஸ்’, ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’, ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ ஆகிய நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் செய்துள்ளார்.

இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். தற்போது இந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு புதிய ரிலீஸ் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் இப்படத்தின் பின்னணி இசை பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது, ‘இட்லி கடை’ படத்தின் முதல் பாதிக்கான பின்னணி இசை பணி முடிவடைந்துள்ளது. சிறிது இடைவெளிக்குப் பிறகு, இரண்டாம் பாதிக்கான பின்னணி இசை பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.