ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பேய் கதையம்சத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘காஞ்சனா’ படத் தொடரின் நான்காவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கோல்ட் மைன்ஸ் நிறுவனம் சார்பில் மணி ஷா தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், பாலிவுட் நடிகையான நோரா வெக்தே ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ‘கே.ஜி.எப்’ புகழ் ராமசந்திரா ராஜூ நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, நான்காவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈ.சி.ஆர் பகுதியில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுவரை தாமதமாக இருந்து வந்த ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு வரும் நாட்களில் பாண்டிச்சேரியில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, ‘காஞ்சனா’ 4ம் பாகத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு லாரன்ஸ் தற்காலிகமாக இடைவெளி விட்டுள்ளார். ‘பென்ஸ்’ படத்தின் சில கட்ட படப்பிடிப்புகளுக்குப் பிறகு, மீண்டும் ‘காஞ்சனா 4’ படப்பிடிப்பு தொடரும் என கூறப்படுகிறது.