தமிழில் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இட்லி கடை படத்தின் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை இப்படம் இரண்டு கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.
மேலும் தனுஷின் 52வது படமான இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள ஒரு மாலில் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற நிலையில் தற்போது இட்லி கடை படத்தின் ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.