Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

என்ன சொல்ல வருகிறது சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ திரைப்படம்? #MissYouMovie

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகும் படம் ‘மிஸ் யூ’. மாப்ள சிங்கம் மற்றும் களத்தில் சந்திப்போம் படங்களை இயக்கிய என். ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஆஷிகா ரங்கநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன் மற்றும் சஸ்டிகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றியுள்ள இந்த படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தமிழகமெங்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

படம் குறித்து இயக்குனர் என். ராஜசேகர் கூறியதாவது: “‘லவ் யூ’ என்று கூறுவதற்குப் பதிலாக ‘மிஸ் யூ’ என்கிற வார்த்தையிலேயே அதிகமான காதல் உணர்வு உள்ளது. அதனால் தான் இந்த பெயரை தேர்ந்தெடுத்தோம். அனைவரும் தங்களுக்கு பிடித்தவர்களையே காதலிக்கின்றனர். ஆனால், இந்த படத்தில் நாயகன் தனக்கு பிடிக்காத பெண்ணையே காதலிக்கிறார். இந்த ஒரே வரியிலான கருத்து தான் சித்தார்தை ஈர்த்தது மற்றும் அவரை இந்த படத்தில் நடிக்க அழைத்துக் கொண்டுவந்தது.

ஒரு மனிதன் எவ்வாறு தனக்கு பிடிக்காத பெண்ணை காதலிக்கிறான்? அவளுக்கு அந்த உண்மை தெரிந்த பின்னரும், அவளை எப்படி மனம் மாற்றி உறுதியாக உணர்த்துகிறான் என்பதற்கான காரணத்துடன் இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது. இது என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு கதை. இப்படத்தின் கதை கண்டிப்பாக தனித்துவமிக்கதாக இருக்கும்.இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் உள்ளன. அதில் ஆறு முழு நீள பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இரண்டு பாடல்களை சித்தார்த் தான் பாடியுள்ளார். “நீ என்ன பார்த்தியா..” மற்றும் “சொன்னாரு நைனா” ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன,” என்றார்.

- Advertisement -

Read more

Local News